Thursday, 16 June 2011

காபி வித் கடவுள்



நாட்டுல பிரச்சினைங்க ரொம்ப ஜாஸ்தி ஆயிட்டதால, இந்த உலகத்தைப் படைச்ச கடவுள்கிட்டயே இதப் பத்தி பேசினா என்னன்னு தோணிச்சு. நமக்கு இங்கிலீஷ் வேற சரியா தெரியாது, அதனால, தமிழ்க் கடவுளான முருகனைக் கூப்பிட்டோம், Now read the conversation:

வாய்யா, முருகா, 4 மணிக்கு வரச்சொன்னா 5 மணிக்கு வர்றே?

எல்லாம் உங்களால தான், செவ்வாய் கிரகத்துல தண்ணீர் இருக்கான்னு ஆராய்ச்சி பண்றேன்னுட்டு வழி நெடுக செயற்கைக்கோளா பார்க் பண்ணி வெச்சிருக்கீங்க. அதுல டிராபிக் divert ஆகி ஜுபிட்டர் வரைக்கும் போய் சுத்திட்டு வரேன்.

அவ்வையாரிடம் காட்டிய அதே லொள்ளு? சரி போவட்டும், எங்க உன் வேல் அண்ட் மயில்?

அதுக்கும் நீங்க தான் காரணம், வரும் போது என் பிரதர் கணேஷ் வார்ன் பண்ணி அனுப்பினான். பூலோகத்துல ஆயுதம் வெச்சிருந்தா POTA , TADA , இல்லேன்னா குண்டர் தடுப்புச்சட்டத்துல உள்ள தள்ளிடுவாங்க. மயிலில் போனேன்னா PETA ஆதரவாளர்கள் வாயில்லா ஜீவனை வதைக்கிறேன்னு கேஸ் போட்டுடுவாங்கன்னு. அதனால ரெண்டும் இல்லாம ஷேர் ஆட்டோல வந்திருக்கேன். சரி, என்ன எதுக்கு அவரசமா வரச்சொன்னே? இந்திர லோகத்துல வீகென்ட் பார்ட்டி இருக்கு. லேட்டா போன தெய்வா திட்டுவா.

எல்லாம் போலாம், காபி ஆறி அவலா போகப்போவுது. சீக்கிரம் குடி.

இந்த உலகத்தை எதுக்கு படைச்சே?

எல்லா ஜீவராசிகளும் சந்தோஷமா இருக்க

அப்படி இருக்காங்களா?

ஏன், இல்லையா?

நக்கலா? உனக்குத் தெரியாதா?

ஹஹஹா

இதெல்லாம் நாங்க திருவிளையாடல்லையே பார்த்தாச்சு, பதில் சொல்லு பாலமுருகா

அடுத்த கேள்வி?

வெள்ளை, கருப்பு, மாநிறம், குளிர், வெயில், மழை, பாலைவனம், கடல், வறட்சி, பசுமை, பஞ்சம், - ஏன் இவ்வளவு வேற்றுமை?

அதனால என்ன ஆச்சு?

அதனால தான் எல்லாமே, போட்டி, பொறாமை, பகை - வாழ்க்கை ஒரு ஓட்டப்பந்தயம் மாதிரி ஆயிடுச்சு.

ஓடு

எல்லாருக்கும் ஒரே மாதிரி வசதி வாய்ப்புகள் செஞ்சு குடுத்திருந்தா நாங்க நிம்மதியா இருந்திருப்போமே?

அப்புறம் நான் எப்படி டைம் பாஸ் பண்றது?

அப்போ, எங்களை டைம் பாசுக்குன்னே வெச்சிருக்கியா?

உனக்கு சொன்னா புரியாது.

இது மழுப்பல்

உங்ககிட்டேர்ந்து கத்துக்கிட்டது தான்.

உன்னைப் பத்தி நிறைய கட்டுக்கதைங்க சொல்றாங்களே? நம்பலாமா?

கட்டுக்கைதைன்னு முடிவு பண்ணிட்டே, அப்புறம் என்கிட்டே எதுக்கு ஒபினியன் கேக்கற?
மனுஷங்களை ஏன் சுயநலவாதிகளா படைச்சே?

படைக்கலே, நீங்க ஆயிட்டீங்க.

அதான் ஏன்?

பயம், எங்க இந்த மக்கள் கூட்டத்துல எனக்கு எதுவும் கிடைக்காம போயிடுமோன்னு பயம்

அதுக்கு நீங்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கே?

எடுத்திக்கிட்டு தான் இருக்கேன். சுனாமி, பூகம்பம், வெள்ளம், வறட்சி

சாகடிக்கறது தான் தீர்வா?

Yes, whenever you exceed the storage limit, i have to delete something

ஒண்ணும் தெரியாத அப்பாவிகளை ஏன் போட்டுத் தள்றே? திருடன் மொள்ளமாரி, இவனுங்களைத் தூக்க வேண்டியது தானே?

நல்லவர்கள் இந்த உலகத்தில வாழமுடியாது, அதனால நான் அவங்களை திரும்ப எடுத்துக்கறேன்.

லாஜிக் உதைக்குதே Mr சுப்ரமண்யா, மனிதர்கள் வாழணும்னு உலகத்தைப் படைச்சே, அப்புறம் நல்லவர்கள் வாழ முடியாதுன்னு சொல்றே, அப்போ இது அரக்கர்களின் உலகமா?

மனிதர்கள் அரக்கர்களாக மாறிய உலகம்

நீங்க செத்தவனுக்கு உயிர் குடுத்ததாகவும் எமன் கிட்டேர்ந்து பல பேரை காப்பாற்றியதாகவும் சொல்லப்படுதே? உண்மையா?

கண்டிப்பா,

அப்போ, இவ்ளோ பேர் உன்னை வேண்டறாங்க. அவங்களையெல்லாம் நீ காப்பாற்றுவாயா?

ஒண்ணு புரிஞ்சுக்க தம்பி, i will not give what you desire, i will give you what you deserve

நீ அப்படி வர்றியா? பெரிசா நினைச்சா தான் சிறிசை அடைய முடியும்னு சொல்றாங்க. அதே சமயம், தகுதிக்கு மீறி ஆசைப்படதேன்னு சொல்றாங்க. எதை நம்பறது? என்னோட தகுதி என்னன்னு எனக்கு எப்படித் தெரியும்?

உனக்குக் கிடைக்கறது கிடைக்காம இருக்காது.

(ரஜினி படம் பார்த்துட்டு வர்றார் போல)

அப்போ முயற்சி செய்யறதே வீணா?

வீண் முயற்சி செய்யாதேன்னு சொல்றேன்

அப்பா, இப்பவே கண்ணைக் கட்டுது. இனி நம்மால முடியாது

என்னை இவ்ளோ கேள்வி கேக்கறியே, என்ன செஞ்சே என்ன செஞ்சேன்னு, நீ எனக்காக என்ன செஞ்சே?

நிறைய செஞ்சிருக்கோமே? எவ்ளோ கோவில்கள், உன் பேர் சொல்லி எவ்ளோ பேருக்கு சாப்பாடு, நாங்களும் நிறைய பண்றோம்ப்பா.

கிழிச்சே, எவனோ ஒரு ராஜா எந்த காலத்திலயோ கட்டின கோவில்களை வெச்சுத் தான் இன்னமும் பிசினஸ் பண்றீங்க. ஒண்ணுமில்லேன்னா எங்க அண்ணனை எல்லா
முட்டுச்சந்துலயும் உக்கார வெச்சிடறீங்க. அப்படியே போற போக்குல ஒரு கும்பிடு போட்டு போறது. அதுலயும் விநாயக சதுர்த்தி வந்துட்டா போதும், பத்து நாளைக்கு loud ஸ்பீக்கர் வெச்சு காது ஜவ்வு கிழிய மியூசிக் போடறீங்க.

என் சம்பந்தப்பட்ட எந்த ஒரு இடமாவது சுத்தமா இருக்கா? நதிகள், கோவில்கள், புண்ணியத்தலங்கள், எல்லா இடத்தையும் பிக்னிக் ஸ்பாட் மாதிரி ஆக்கி குப்பையை கொண்டு வந்து கொட்டறீங்க.

நீ 100 ரூபாய் குடுத்தா நான் உன்னை எக்ஸாம் பாஸ் பண்ணி விடணும், 500 ரூபாய் குடுத்தா அட்மிஷன் வாங்கித்தரணும், 5000 ரூபாய் குடுத்தா உனக்கு பொண்ணு பார்த்து குடுக்கணும். என்னை ஏஜென்ட் மாதிரி ஆக்கிட்டீங்களேடா! முன்னாடியெல்லாம் கடவுள்னா பக்தி இருந்தது, அப்புறம் பயம் இருந்தது. இப்போ ரெண்டும் இல்லை.

நாங்க என்னப்பா பண்றது? முன்னோர்கள் சொன்னபடி செய்யறோம். இந்த சாமிய கும்பிட்டா கொழந்தை பொறக்கும், அந்த சாமிய கும்பிட்டா படிப்பு வரும்னு ஏரியா வாரியா நீங்க பிரிஞ்சு இருக்கும்போது நாங்க எல்லா இடத்துக்கும் போக வேண்டியிருக்கே? அதுல கொஞ்சம் அப்படி இப்படி ஆயிடுது. இதெல்லாம் ஒரு மேட்டரா Mr வடிவேல்? நான் உனக்குக் கீழ இருக்கறவன் தானே? நீ தான் எனக்கு விதிமுறைகள் எல்லாம் ஒழுங்கா சொல்லிக் குடுத்திருக்கணும். அது உன் தப்பு. எங்க ஆபீஸ் மேனேஜர் மாதிரி வேலையைப் பத்தி எதுவும் சொல்லாம திடீர்னு வந்து வேலை ஆச்சான்னு கேட்டா என்ன அர்த்தம்? இவ்ளோ பேசறியே, ஒரே கடவுளா இருக்க வேண்டியது தானே? ஹிந்து, முஸ்லிம், கிறித்துவம். அது போக ஹிந்துவுக்குள்ள சிவன், விஷ்ணு, மாரியம்மா, பராசக்தி, முருகன், விநாயகன் அனுமார்,இதுபோக காபினெட் மந்திரிங்க மாதிரி நவக்ரகங்கள் வேற - மனுஷங்க ஜாதிய விட உங்க எண்ணிக்கை அதிகமா இருக்கும் போல.

நாங்க பாட்டுக்கு first half ரோபோ ரஜினி மாதிரி சாந்தமா இருந்தோம். திடீர்ன்னு ஏதோ ஒரு ரெட் சிப் போட்டு எங்களை second half வில்லன் ரோபோவா மாத்தினது யார் குற்றம்?

(ஆஹா, கரெக்டா கேட்டுப்புட்டான், இங்கேர்ந்து எஸ்கேப் ஆயிட வேண்டியது தான்)

மானிடா, முடிவாக என்ன தான் சொல்கிறாய்?

யோவ், என்ன பேரமா பேசறோம்? இந்த உலகம் உருப்படுமா உருப்படாதா?

அது உன் கையில் இருக்கு

போச்சுடா, மறுபடியும் முதல்லேர்ந்து ஸ்டார்ட் பண்றான் இந்த ஆளு.

சரி நீ கிளம்பு, மணி 7 ஆவுது, முக்கியமான வேலை இருக்கு.

என்ன, கை நடுங்குதா? சோம பானம் அருந்த வேண்டுமா?

ஆமாம், உனக்கு சோம பானம், எனக்கு சுண்ட கஞ்சி

சரி போற வழியில என்னை ட்ராப் பண்ணிடு. இனிமே மேல போனா தெய்வானை அடிக்கும். நேரா கொடைக்கானல் வள்ளி வீட்டுக்கு போக வேண்டியது தான்.

குடுத்து வெச்சவன், இந்த ரெண்டு பொண்டாட்டி மேட்டரும் உங்க கிட்டேர்ந்து கத்துக்கிட்டது தான்

பேசாம வண்டிய ஒட்டு. இல்லேன்னா இங்கயே உன்னை தூக்கிடுவேன்.

அது உன்னால முடியாது. உன் ipad database முழுக்க copy பண்ணிட்டேன், எனக்கு இன்னும் டைம் இருக்கு. உன் குடுமி என் கையில, என்ன லுக்கு விடற, வண்டிய ஒட்டு.

அடப்பாவி, உன் புத்தியை காட்டிட்டியே?

எல்லாம் நீ குடுத்ததுதான் தலைவா.

எல்லாம் கலி காலம், ஒரு காபிக்கு ஆசைப்பட்டு வந்ததுக்கு நல்ல கத்துக்கிட்டேன்டா

"ஆசையே துன்பத்துக்குக் காரணம்"

இதைத் தான் நான் இவனுக்கு சொல்ல வந்தேன், நமக்கே கருத்து சொல்றானே, விஞ்ஞானி ரஜினி மாதிரி ஆகிப்போச்சே நம்ம நிலைமை. எங்க அப்பன் கிளம்பும்போதே சொன்னான், பூலோகத்துல உஷாரா இரு, இல்லேன்னா நிஜார உருவிடுவாங்கன்னு, கேட்டோமா நாம? இது எப்படி தெரியுமா இருக்கு, அண்ணே நீ கேளேன், அக்கா நீ கேளேன், தம்பி நீ கேளேன்,